பஞ்சாப் அணி நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீசம்-ஐ ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய ஆல்ரவுடண்டர் மிட்செல் மார்ஷை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் சவுரப் திவாரியை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில், கோலின் மன்ரோ, தென்னாப்பிரிக்காவின் கோலின் இன்கிராம், ஆண்டிலோ பிலாக்வாயோ, ஆன்ரிச் நோகியே, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கார்லஸ் பிராத்வெயிட், அல்ஜாரி ஜோசப், இந்தியாவின் ரிஷி தவன், பாரிந்தர் ஸ்ரன், ஆஸ்திரேலியாவின் பென் கட்டிங், இங்கிலாந்தின் மார்க் வுட் ஆகியோர் விலைபோகவில்லை.
ராஜஸ்தான் அணி டேவிட் மில்லரை ரூ.75 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸையும், இந்திய அணியின் மனோஜ் திவாரியும் ஏலத்தில் விற்பனையாகவில்லை.
டெல்லி அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மையரை ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இன்றைய ஏலத்தின் மிகக் குறைந்த வயது (14) வீரரான நூர் அஹமதுவை யாரும் வாங்கவில்லை.
பஞ்சாப் அணி ரவி பிஸ்னாய்-ஐ ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணி எம்.சித்தார்த்தை ரூ.20 லட்சதிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணி இஷான் போரலை ரூ.20 லட்சதிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணி இளம் வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகியை ரூ.1.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணி வருண் சக்ரவர்த்தியை பஞ்சாப் அணி ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.