நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

Webdunia
புதன், 3 மே 2023 (15:23 IST)
ஐபிஎல்-2023- 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன.  லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும்  நிலையில், லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும், இதில், புள்ளிப்பட்டியலில் 4 இடங்களைப் பெறும் அணிகள் முந்தைய பிளே ஆப் சுற்றிற்குத் தகுதி பெறும்.

இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியின் முன்னணி வீரர் ஜெயதேவ் உனத்கட் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம்காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சியில், பந்து வீசும்போது தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரது இடதுதோள்பட்டையின் காயம் ஏற்பட்டதாக் விலகியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

உலக டெஸ்ட் சேம்பியன் போட்டி ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் நிலையில், இதற்குள் அவர் உடல் நலம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்