டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி – மும்பை அணியில் நடந்த மாற்றம்!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (15:59 IST)
இன்று நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இன்று வார இறுதி நாள் என்பதால் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதலில் நடக்கும் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்து வீசி வருகிறது. தற்போது வரை டெல்லி அணி 2 விக்கெட்களை இழந்து 21 ரன்களை எடுத்துள்ளது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷா 10 ரன்களிலும் ஷிகார் தவான் டக் அவுட்டும் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இந்த இரண்டு விக்கெட்களையுமே ட்ரண்ட் போல்ட் கைப்பற்றினார். மும்பை அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு ஜெயந்த் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்