ஐபிஎல்-2020 ; பஞ்சாப் பவுலர்களுக்கு தண்ணி காட்டிய மும்பை அணி !

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (21:12 IST)
ஐபிஎல் 2020 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

எதிர்பாராத திருப்பு முனைகள் அதிரடிகள் என பலதரப்பட்ட விஷயங்களுடன் இந்த வருடம் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், மும்பை அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில்  ரோஹித் சர்மா அவுட்டானார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மாவிற்கு முதலாவதாக சுரேஷ் ரெய்னா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்