கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

vinoth

சனி, 28 செப்டம்பர் 2024 (13:07 IST)
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணி, இந்தியாவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது இதுவே முதல்முறை.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்து வரும் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்த போது மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயேக் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டமும் இதுவரை தொடங்கப்படவில்லை.

தற்போது வரை மைதானம் படுதாக்களால்தான் மறைக்கப்பட்டுள்ளது. படுதாக்களில் உள்ள நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் இன்றைய ஆட்டத்தின் மூன்றாவது செஷனாவது தொடங்குமா அல்லது முழுநாள் ஆட்டமும் கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்