18 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: டெல்லியிடம் படுதோல்வி அடைந்த ஐதராபாத்!

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (06:00 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய முதல் போட்டியில் சென்னை அணி, கொல்கத்தாவை வீழ்த்திய நிலையில் இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத், முதலில் பந்துவீச முடிவு செய்ததால் டெல்லி அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி, டெல்லி அணி பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குறிப்பாக வார்னர் மற்றும் பெயர்ஸ்டோ நல்ல தொடக்கத்தை தந்தபோதிலும் அதன்பின்னர் வெறும் 18 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள் வீழ்ந்ததால் ஐதராபாத் படுதோல்வி அடைந்தது.
 
இந்த வெற்றியால் டெல்லி அணி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஐதராபாத் அணியின் ரபடா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதேபோல் மோரீஸ் மற்றும் கீமோபால் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். கீமோபால் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
 
ஸ்கோர் விபரம்:
 
டெல்லி அணி: 155/7  20 ஓவர்கள்
 
முன்ரோ: 40
ஸ்ரேயாஸ் ஐயர்: 45
ரிஷப் பண்ட்: 23
 
ஐதராபாத் அணி: 116/10  18.5 ஓவர்கள்
 
வார்னர்: 51
பெயர்ஸ்டோ: 41
 
இன்றைய போட்டி: மும்பை மற்றும் பெங்களூர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்