இதுவரை இந்த நவீன அறிவியல் வளர்ச்சி, இணைய பயன்பாடு அனைத்தும் மேற்கத்திய பொருட்களுக்கும், சந்தைக்குமானது என்றிருந்த நிலையில்.இன்றைய அறிவியல் வளர்ச்சியை தங்களின் பாரம்பரிய உணவுப் பண்டங்களைக் காக்கும் முயற்சிக்கான இடமாக மாற்றி வெற்றி கண்டுள்ளனர் நம் தமிழ் இளைஞர்கள்.
ஆம் நமது பாரம்பரிய உணவுப் பண்டங்களை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) எனும் இணையம் மூலம் அனைத்து மக்களின் கைகளுக்கும் கொண்டு சேர்க்கின்றனர். தித்திக்கும் சுவையும், மருத்துவ நலன்களும் நிறைந்த நமது பண்டைய தின்பண்டங்கள் அனைத்தும் இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கிடைக்கிறது.
மண்பானைப் பால்கோவா, கருப்பட்டி மைசூர்பாக், நெல்லை அல்வா, சாத்தூர் சேவு, மணப்பாறை முறுக்கு, வெள்ளியணை அதிரசம் என அனைத்து சுவைகளும் நம் கை விரல் அசைவில். நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஒரே நாளில் தமிழகம் மற்றும் பெங்களூரில் டெலிவரி. அமேரிக்கா, ஐரோப்பா என அனைத்து நாடுகளுக்கும் ஐந்து நாட்களில் அதிவிரைவு டெலிவரி செய்து அசத்துகின்றனர். கடல் கடந்து நம் பண்டங்களின் மணமிக்க ருசியினை எதிர்பார்ப்பவர்க்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது நேட்டிவ்ஸ்பெஷல்.காம்.
இது பற்றி அவர்களிடம் கேட்ட பொழுது "சுவை மிகுந்த நம்ம ஊர் தின்பண்டங்கள் கிட்டத் தட்ட நம் குழந்தைகளுக்கு அறிமுகமில்லாமல் போய் விட்டது.. பாப்கார்ன் தெரிந்த குழந்தைகளுக்கு நம்ம ஊர் பொரி கடலை தெரிவதில்லை அவர்கள் அவற்றை சுவைப்பதற்கான சந்தர்ப்பமும் இங்கு இல்லை. ஆனால் பாப்கார்னை விட பொரி கடலை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சாக்லேட் ருசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கடலை மிட்டாய் ருசிக்க வாய்ப்பில்லை. இப்படி ஓர் நிலைக்கு முக்கிய காரணம் தரமான நம்ம ஊர்ப் பண்டங்கள் சந்தையில் கிடைப்பதில்லை என்பதுதான்.
எனவே தரமான நம் பாரம்பரிய பண்டங்கள் கிடைப்பதில்லை என்ற நிலையை நீக்கி அவர்கள் இவற்றை ருசிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதை முதன்மையாகக் கொண்டு துவங்கப் பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையம். இன்று எங்கள் வாடிக்கையாளர்களின் குழந்தைகள் பாப்கார்ன், சாக்லேட், இவற்றைப் புறந்தள்ளி தேங்காமிட்டாய், கடலை மிட்டாய், கருப்பட்டி மைசூர்பாக் என நம் பாரம்பரியப் பண்டங்களை கேட்டு வாங்கி உண்பது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. "
தெளிவான நோக்கத்துடன் உலகம் முழுமைக்கும் நம் பாரம்பரிய பண்டங்களை அவை புகழ்பெற்ற ஊர்களில் இருந்து நேரடியாக கொண்டு சேர்க்கும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.