சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை சேர்ப்பதால் என்ன நன்மை?

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (23:48 IST)
கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்புக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
 
சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
 
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து பயன்படுத்துவதனால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும்,  உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
 
நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
 
குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.
 
சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.
 
காபியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்