கருப்பட்டியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனை படிப்படியாக நீங்கிவிடும். நன்கு பசி எடுக்க, சீரகம், சுக்கு வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் போதும். நன்கு பசி எடுக்க துவங்கிவிடும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கருப்பட்டியை மறந்து, தீராத நோயை உண்டாக்கும் வெள்ளை சர்க்கரையை தேடித் தேடிப் போய் வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.