சிறுநீரின் நிறத்தை வைத்து உடல்நல பாதிப்புகளை அறிய முடியுமா?

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (10:54 IST)
நம் உடல் நலம் காக்க தினசரி தண்ணீர் குடிப்பது அவசியமான செயல்பாடாக உள்ளது. தினசரி எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதும் நபருக்கு நபர் மாறக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் அதிகம் தண்ணீர் அருந்துவது கூட பல உடல்நல பாதிப்புகளை உருவாக்கும் அபாயமும் உள்ளது. தினசரி வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்து இந்த பிரச்சினைகளை அறியமுடியும்.


நாம் நேரடியாக பருகும் தண்ணீர் மட்டுமல்லாமல் உண்ணும் உணவுகள், பழங்கள், சாறுகள் உள்ளிட்டவை மூலமாகவும் மறைமுகமாக உடலுக்கு நீர்சத்து கிடைக்கிறது. ஆனால் சிலர் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என குடித்து கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அதிகமாக தண்ணீர் அருந்துவதால் உடலில் நீர் அதிகரித்து பல பிரச்சினைகளையும் உருவாக்கும். பொதுவாக கோடை காலங்களில் தாகம் அதிகம் எடுக்கும் அப்போது சாதாரணமாகவே மக்கள் 3 லிட்டருக்கு அதிகமாகவே தண்ணீர் பருகுகிறார்கள். அதுபோல குளிர், மழை காலங்களில் தண்ணீர் பருகும் அளவு குறையும். இதை கணக்கில் கொள்ள வேண்டும்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடல் உள் உறுப்புகளின் இயக்கம் அதிகரிக்கிறது. சரியான அளவில் தண்ணீர் அருந்துபவர்களுக்கு சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். ஆனால் அதிகமாக தண்ணீர் அருந்தினால் சிறுநீர் வெள்ளை நிறத்தில் வெளியேறும். இது அதிகமான நீர் இழப்பிற்கான அறிகுறியாகும். வெயில் காலங்களில் பலருக்கு சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். இது உடல் சூடு அதிகரித்துள்ளதையும், நீர்சத்து குறைந்துள்ளதையும் காட்டுகிறது.



அதிகமான நீர் பருகுவது அதிகமுறை சிறுநீர் கழிக்க செய்யும். ஒருநாளைக்கு 8 முதல் 10 முறை வரை சிறுநீர் கழிக்கலாம். ஆனால் அதற்குமேல் என்றால் உடலுக்கு தேவையான சத்துகளை இழக்க நேரிடும். இதனால் அடிக்கடி உடல் சோர்வு, தூக்கம் ஏற்படும். அதிகமான தண்ணீர் பருகுவது உடலில் உள்ள எல்க்ட்ரோலைட்டுகளை பாதிப்பதால் கை, கால், உதடுகளில் வீக்கம் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் தாகம் எடுக்கும்போது, உடலுக்கு நீர் தேவைப்படும்போது தேவையான அளவில் தண்ணிர் எடுத்துக் கொள்வதே ஆரோக்கியமான வழியாகும்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்