இந்தியாவின் பாரம்பரியமான யோகா கலை உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் ஒரு பயிற்சியாகும். உடலை வலுப்படுத்த யோகா முறைகள் உள்ளது போல மூளையின் சக்தியை அதிகரிக்கும் தியான யோகா முறைகளும் உள்ளன. அதுகுறித்து காண்போம்.
பத்மாசனம் செய்வதால் உடலில் உள்ள சக்கரங்கள் தூண்டப்படுவதுடன் மூளைக்கு அமைதியை தருகிறது.
ப்ராணயாம யோகா பயிற்சி ஒரு மூச்சு கலை பயிற்சியாகும். மூச்சை இழுத்து விடுவதன் மூலம் மன அமைதியை பெற உதவுகிறது.
வஜ்ராசனம் யோகா உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்வதுடன் தசைகளை இலகுவாக்குகிறது.
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் செய்வதன் மூலம் மூளையின் ஞாபக திறன் கூடுகிறது.
பஸ்சிமோத்தனாசனம் என்பது முன்னோக்கி நகர்ந்து கால்களை தொடும் ஆசனம். இது மூளைக்கான ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
ஹலாசன யோகா தலைகீழ் கவிழ்ந்து கலப்பை போல உடலை நீட்டும் பயிற்சி. இதனால் மனதின் சக்தி அதிகரித்து சிந்தனை திறன் கூடுகிறது.
கடினமான யோகா ஆசன முறைகளை யோகா பயிற்ச்சியாளர் உதவியுடன் செய்வது நல்லது.