ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

ஆப்ரிகாட் பழங்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்களும்  நிறைந்திருக்கின்றன. 

இந்த பழத்தில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால், இது உடலுக்குத் தேவையான சத்துக்களை தருவதோடு, உடல் எடையையும் சீராக வைத்துக் கொள்ள  உதவுகின்றது.
 
இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது. 
 
தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை  பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.
 
தினமும் இந்த ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தால் குடலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இதில் அதிகம் கரையும் மற்றும் கரையாத நார் சத்து இருப்பதால், உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
 
சருமம் வறண்டு போகாமல் இருக்கவும், நல்ல போஷாக்குடன் இருக்கவும், ஈரத்தன்மை மிகவும் முக்கியம். இந்த பழம் சருமத்திற்குத் தேவையான ஈரத்தன்மையை போதுமான அளவு தந்து எப்போதும் நீரேற்றத்தோடு வைத்திருக்க உதவுகின்றது.
 
இந்த பழத்தில் வைட்டமின் A மற்றும் பல சத்துக்கள் கண்ணின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகின்றது. இதனால் கண்களில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் குணமடைந்து, நலல் ஆரோக்கியம் பெற உதவுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்