அடிக்கடி நாவல் பழம் சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள் ?

நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்க கூடிய ஒன்று ஆகும். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் பலவித வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

நாவல் மரத்தின் பழங்களைக் காட்டிலும் விதைக்கே அதிக மவுசு உள்ளது. காரணம் அந்த விதையானது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினைக் குறைப்பதால் பலரும் இதனை வாங்கி உண்ணுகின்றனர்.
 
நாவல் பழமானது ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு, கல்லீரல் பிரச்சனைகள், பற்களை வலுவாக்குதல், சிறுநீர்ப்பை பிரச்சனைகள், செரிமானப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.
 
நாவல் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கு மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று  ஆகும்.
 
நாவல் பழத்தின் இலையானது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடுகிறார்கள். மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் நாவல் பழத்தினை சாப்பிடுவதுண்டு.
 
அல்சர் என்னும் குடற்புண்ணிற்கு நாவல் பழம் மிகச் சிறந்த மருந்தாக பரிசீலிக்கப்படுகின்றது. மேலும் இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக  உள்ளது.
 
நாவல் பழத்தில் அதிக அளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் காக்க உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்