ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி எவ்வாறு பயன்படுகிறது...?

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். 

ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
 
உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கியம் உண்டாக இதனை உணவாக அளிக்கலாம். ஏனெனில் இது உடனடி ஆற்றலையும், செரிமான சக்தியையும்  அளிக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சி அடைய வைப்பதிலும், இது முக்கிய பங்கு வகிக்கிறது.
 
உடலில் உள்ள ஜீரண உறுப்புகளான உணவுக் குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்கள் அல்சர் எனப்படுகிறது. இத்தகைய அல்சர் புண்களை  ஆற்றுவதில் ஜவ்வரிசி மிக சிறப்பாக செயல்படுகிறது.
 
ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று  நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வு ஜவ்வரிசி தான்.
 
உடலின் எலும்புகளை ஆரோக்கியமாக்கும், மூட்டுவலியைக் குறைக்கும். மேலும் பதட்டத்தைக் குறைக்கும். உடற்பயிற்சிக்கு முன், பின் என எப்போதும் இதை  சாப்பிடலாம். ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்