வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்...!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (23:51 IST)
வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ  அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.
 
தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
 
வெந்தயத்தில் என்ற வேதிப்பொருள் உள்ளதால் இருதய நோய் வருவதை தடுக்கிறது. வெந்தயத்தில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தையும் இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில்  குறைக்கிறது.
 
வெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போக்குகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம்  உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.
 
வெந்தயம் முகப் பொலிவை மெருகேற்றுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை  வெந்தயம் கலந்த முகப்பூச்சுகள் நீக்குகின்றன. வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவ முகம்  பளபளக்கும்.
 
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை  மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வது நிற்கும். தலைமுடி  அடர்ந்து வளரும்.
 
மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்திற்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு  சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறை வெந்தயம் போக்குகிறது.
 
சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரிந்திட்டு சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும். கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு  குணமாகும்.
 
உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை ஊற வைத்து. மையாக அரைத்து தீக்காயத்தின் மீது பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். ஒரு துண்டு இஞ்சியுடன் கொஞ்சம் வெந்தயம் வைத்து  அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
 
வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும். உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகப் பொடி கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்