பான் கார்டுடன் ஆதார் இணைப்பு ; வரும் 30 ஆம் தேதி கடைசிநாள்

திங்கள், 14 ஜூன் 2021 (21:01 IST)
வரும் ஜூன் 30 ஆம் தேதிக்கும் பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறிய கால அவகாசம் நிறைவடைய இன்னும் 2 வாரம் மட்டுமே இருப்பதால் பலர்  இன்னும் இதன் அவசியம் தெரியாமல் இணைக்காமல் உள்ளனர்.
 

ஏற்கனவே இருமுறை மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அவகாசம் வழங்கி இணைப்பதற்காக கால அவகாசத்தை நீட்டித்தது.

வரும் ஜூலை 1 ஆம் தேதிக்கும் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால்  அவர்கள் ரூ.1000 வரை அபராதம் கட்ட நேரிடும் எனவும், அவர்களின் முக்கிய பணவழிப் பரிமாற்றம், வங்கி, பிஎஃப், உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் வாகனங்கள் வாங்கவும் விற்கவும் முடியாது. வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க முடியாது., கிரெடிட், டெபிட் கார்கள் பெற முடியாது. ஹோட்டர், நட்சத்திர விடுதிகளில் சுமர் ரூ50,000க்கு மேல் பணம் செலுத்த முடியாது மேலும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பத்திரங்கள் வாங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்