முருங்கைக்கீரை சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம்

Webdunia
பொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.


 


இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, சருமம், சுவாசப் பாதை, செரிமான மண்டலம் போன்றவற்றில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இரத்த சோகை இருந்தால் மாதவிடாய் சுழற்சியானது சீராக நடைபெறாமல் போகும்.
 
பெண்கள் கருத்தரித்தால், வயிற்றில் வளரும் குழந்தையானது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும். ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு குறைவாக இருந்தால், அதனை இயற்கை முறையில் அதிகரிக்க முருங்கைக்கீரையை சாப்பிடுங்கள். இதில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து மட்டுமின்றி, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்றவையும் உள்ளது.
 
தெளிவான பார்வை
 
முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை கிடைக்கும்.
 
நோயெதிர்ப்பு சக்தி
 
முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.
 
இதயத்திற்கு நல்லது
 
முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் தாக்கும் மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும்.
 
புற்றுநோய்
 
முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.
 
எலும்பு மற்றும் பற்கள்
 
முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்கும்.
 
இரத்த சோகை
 
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்