தினமும் கரும்பு சாறு எடுத்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (23:55 IST)
கரும்புச்சாறு தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ பலன்களை அறிந்து கொள்ளலாம்.
 
கரும்புச்சாறு விற்பனை செய்யும் கப்பல் ஊழியர்
இனிப்பு சுவையில் கரும்பை மிஞ்ச வேறு எந்த ஒரு பொருளாலும் முடியாது. இது தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
 
இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை  குணப்படுத்த உதவுகிறது.
 
மஞ்சள் காமால் பாதிக்கப்படுபவர்களை தினமும் கரும்பு சாறு குடிக்கும் மாறு ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.இது உடலில் உள்ள பித்த அளவை சீர் செய்கிறது.கரும்பு சாறு குடிப்பதால் சீறுநீரக கற்கள் மாயமாய் மறைந்து விடுகிறது.
 
கரும்பு சாறு சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த  கரும்பு சாறு எடுத்துக் கொண்டால் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கி, உடலை தூய்மைப் படுத்துகிறது.
 
செரிமான பிரச்சினை நீங்க, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு தினமும் கரும்பு சாறு உட்கொள்ள வேண்டும். கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன்செய்ய உதவுகிறது.
 
கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது. இது பற்சிதைவை தடுத்து பற்கள் வலுவடைய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள  நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்