அன்றே சொன்ன ரஜினி... டுவிட்டரில் தேசிய அளவில் டுரெண்டிங்...

திங்கள், 26 ஏப்ரல் 2021 (23:29 IST)
ரஜினியின் அறிக்கையில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி டுவிட்டரில் அன்றே சொன்ன ரஜினி என்ற  ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகிவருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தனது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தினார். கடந்த 2020 ஆம் ஆண்டு வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

ஆனால் திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சென்னையிலுள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்துவந்தபோது, தான் அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை எனக் கூறினார்.

இதனால்  ரசிகர்கள் வருத்தம் அடைந்தாலும் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போதில்லை என்று கூறி வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடைசி வரியில், இந்தக் கொரொனா உருமாறி வருகிறது.  நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் சிலர் நாலுவிதமாகப் பேசுவார்கள் என்னை நம்பி வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான் உண்மையக் கூற தயங்கியதில்லை எனத் தெரிவித்தார்.

சமீபத்தில்  தேர்தல் பிரச்சாரத்தில் அதிகளவில் கொரொனா பரவியதால உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் எனக் கூறியுள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஆக்ஸியன் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று மதியம் முதலில்  ரஜினியின் அறிக்கையில் சுட்டிக் காட்டிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி அன்றே சொன்ன ரஜினி என்று  டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்