அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள வெங்கடேஷ்வரர் ஆலயம்!

Webdunia
தலவரலாறு: அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் கலாபாசாஸ் பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் சங்கம் ஒரு லாப நோக்கமற்ற மையமாகும். இவ்வமைப்பு 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.

 

1997 ம் ஆண்டு ஜுன் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வசித்த இந்திய வம்சாவழியினர் ஒன்று கூடி அப்பகுதியில் இந்துக்  கோயில் ஒன்று அமைக்க முடிவு செய்தனர். 
 
இவர்களின் கடின உழைப்பால் 1977 ம் ஆகஸ்ட் 18 ம் தேதி இந்த வழிபாட்டுத் தலம் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாக உருவானது. இவ்வமைப்பின் சொத்துக்கள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆகியன இந்து சமுதாயத்தின்  பயன்பாட்டிற்காகவே பயன்படுத்த வேண்டும் என்பது இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும். இக்கோயிலின் முக்கிய தெய்வம்  அருள்மிகு வெங்கடேஷ்வரர் ஆவார். 
 
இது தவிர இக்கோயிலில் மேலும் பல சன்னதிகள் அமைக்கப்பட்டு பல்வேறு தெய்வங்களும் நிறுவப்பட்டுள்ளன. இக்கோயில்  சிற்ப சாஸ்த்திர முறைப்படி யும் சோழ மன்னர்களின் கோயில் கட்டும் முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல கோயில்களைக் கட்டிய இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான முத்தைய்யா ஸ்தபதியால் இக்கோயில்  வடிவமைத்து கட்டப்பட்டதாகும். 
 
அடித்தளம் மற்றும் தோற்ற அமைப்புக்கள் ஆகியன உள்ளுர் கட்டிடக்கலை வல்லுநர்களைக் கொண்டும், தூண் வேலைப்பாடுகள்,  சிற்பங்கள் ஆகியன இந்திய சிற்பிகளைக் கொண்டும் கட்டப்பட்டது. மேற்கத்திய பகுதியில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 
 
முக்கிய தெய்வங்கள்: வெங்கடேஷ்வரர், ராமர்-சீதை-லட்சுமணன்-ஹனுமன், ஆண்டாள், பத்மாவதி, ஜோதி, கன்னிகா  பரமேஷ்வரி, கணேசர், சுப்ரமணியர், சிவன் மற்றும் ராதா-கிருஷ்ணர். 
 
கோயில் நேரங்கள்:
 
கோடை காலம்: காலை 9.00 - பகல் 12.30 ; மாலை 5.00 - இரவு 8.00
குளிர்காலம்: காலை 9.00 - பகல் 12.30 ; மாலை 5.00 - இரவு 7.00
 
வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள்: 
 
கோடை காலம்: காலை 8.00 - இரவு 8.00 
குளிர் காலம்: காலை 8.00 - இரவு 8.00
அடுத்த கட்டுரையில்