ராகு-கேது பெயர்ச்சி; அனைத்து ராசிகளுக்கான பரிகாரங்கள் - 27.7.2017 முதல் 13.2.2019 வரை!!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (15:29 IST)
மேஷம்: செவ்வாய்க்கிழமை தோறும் மாரியம்மன் சந்ததியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசித்து அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகும். ராகுவுக்கும், சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.


 
 
ரிஷபம்: வெள்ளி தோறும் காமதேனுவின் படத்திற்கு பூஜை செய்து வருவதோடு, கோபூஜை செய்து வணகுவதில் மன நிம்மதி  கிடைக்கும். திருக்கோகர்ணத்தில் உள்ள அரைக்காசு அம்மனை தரிசித்து, அர்ச்சனை செய்தால் மனம் தெளிவடையும். ராகு கேது  சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
 
மிதுனம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். புதன்கிழமை தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது. ஸ்ரீவைகுண்டம் சென்று வைகுண்டவாசனை தரிசித்து பிரார்த்தனை செய்ய பலம் பெறுவீர்கள்.
 
கடகம்: குருவுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். ராகு-கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.சோமவாரம்  அல்லது அமாவாசை நாட்களில் அரச மரமும், வேப்ப மரமும் இணைந்துள்ள இடத்தில் உள்ள நாகருக்கு பால் அபிஷேகம்  செய்வது நல்லது. காளஹஸ்தி சென்று ராகு-கேது சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபடுவதால் நன்மை உண்டாகும்.
 
சிம்மம்: இந்த ஒன்றரை வருட காலத்திற்கு, தமிழ் மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நாளன்று அருகிலுள்ள  சிவாலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வருவது நல்லது. திருபுவணம் சரபேஸ்வரரை தரிசித்து,  அர்ச்சனை செய்ய மன சஞ்சலம் நீங்கும். நவக்கிரகங்களை சுற்றி வருவது நன்மை தரும்.
 
கன்னி: துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படையுங்கள். புதன்கிழமை தோறும் சிவாலயத்திலுள்ள சண்டிகேஸ்வரர் சந்நதில்யில் விளக்கேற்றி வைத்து, ஐந்து முறை சுற்றி வந்து வணங்கி வாருங்கள். குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதரை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய மனத்தெளிவு பிறக்கும்.
 
துலாம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுங்கள். ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யுங்கள். இந்த ஒன்றரை வருட காலத்திற்கு, வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. சமயபுரம் சென்று மாரியம்மனை வணங்க வளம் காண்பீர்கள்.
 
விருச்சிகம்: ராகுவுக்கு நீல நிற வஸ்திரம், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய் தோறும் ஆஞ்சநேய ஸ்வாமியின் ஆலயத்திற்குச் சென்று சந்நதியை ஏழுமுறை வலம் வந்து வழிபடுதல் நன்மை தரும். சுசீந்திரம் சென்று ஆஞ்சநேய ஸ்வாமியை தரிசிக்க சிரமங்கள் விலகும்.
 
தனுசு: சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரம் சாத்தி வழிபடுவது நல்லது. மாதம்  வரும் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று துர்க்கையை வழிபட தடைகள் அகலும். விஷேசமாக கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
 
மகரம்: விநாயகரையும், நரசிம்மரையும் வழிபட்டு வாருங்கள். திங்கட் கிழமைதோறும் அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று இரட்டை அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வருவதோடு, விநாயகர் அகவல் பாராயணம் செய்து வருவது நன்மை தரும். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் முக்குருணி விநாயகரை தரிசித்து, உங்கள் பெயருக்கு  அர்ச்சனை செய்வது சிரமத்தை குறைக்கும்.
 
கும்பம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குவது நல்லது. ஆதரவற்றோருக்கு உதவுங்கள். மாதம் வரும் அமாவாசையில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதோடு, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இயன்ற உதவியை செய்வது நல்லது.  ஐயப்பனை தரிசித்து, பிரார்த்தனை செய்துகொள்ள நன்மை உண்டாகும்.
 
மீனம்: காக்கைக்கு அன்னமிட்ட பின் சாப்பிடுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் விளக்கேற்றுங்கள். ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வருவதோடு, உச்சரிப்பதும் உங்கள் மன சஞ்சலத்தைப் போக்கும். வியாழன் தோறும் ராமர் வழிபாடு நன்மை தரும்.  இராமேஸ்வரம் சென்று வழிபடுவது நன்மை உண்டாகும்.
அடுத்த கட்டுரையில்