1984ல் வொண்டர் வுமன்! – அசத்தல் சூப்பர்ஹீரோ ட்ரெய்லர்!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (20:44 IST)
சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் பிரபலமான வொண்டர் வுமன் திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

டிசி காமிக்ஸின் சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் மிகவும் பிரபலாமான பெண் சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரம் ‘வொண்டர் வுமன்’. ஏற்கனவே பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான ’வொண்டர் வுமன்’ திரைப்படம் வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. அதில் நடித்த கேல் கடாட்டுக்கு பெரும் ரசிகர்கள் உருவானார்கள்.

மீண்டும் அதே கூட்டணியே இந்த இரண்டாவது படத்திலும் இணைந்துள்ளனர். 1984ல் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் உலக போரில் இறந்து போன வொண்டர் வுமனின் காதலன் ஸ்டீவ் திரும்ப வருவதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

சூப்பர்மேன், பேட்மேனோடு இணைந்து ஜஸ்டிஸ் லீகில் உலகை காப்பாற்றிய வொண்டர் வுமன் மீண்டும் தனியாளாக சாகசம் செய்ய இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ட்ரெய்லர் வெளியாகி சூப்பர்ஹீரோ பட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டிசி ‘வொண்டர் வுமன்” ரிலீஸ் செய்யும் அதே சமயம் மார்வெல் ‘ப்ளாக் விடோ’ படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்