முக்கிய வழக்கில் சீமான் விடுதலை: நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி!

வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:06 IST)
முக்கிய வழக்கில் சீமான் விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் அதனை கொண்டாடி வருகின்றனர் 
 
2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் மற்றும் நாம் தமிழர் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது
 
இந்த மோதலை அடுத்து மதிமுக மாவட்டச் செயலாளர் சோமு தாக்கப்பட்டதாகவும் அதற்கு  சீமான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டப் பட்டது 
 
இதனையடுத்து சீமான் உள்பட 14 பேர் மீது திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது
 
இந்த தீர்ப்பில் சீமான் உள்பட 14 பேர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் 14 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்