பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:29 IST)
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!
குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேர்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
குஜராத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் பில்கிஸ் பானு என்பவர் 11 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது 3 வயது குழந்தையும் கொல்லப்பட்டார் 
 
இதனையடுத்து இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் குஜராத் அரசால் கடந்த சுதந்திர தினத்தின்போது விடுதலை செய்யப்பட்டனர்
 
இந்த விடுதலைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து திரிணாமுல் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
 
மேலும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்ட சிலரும் குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்