நிம்மதியை இழந்துவிட்டேன்: ரூ.25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ டிரைவர் ஆதங்கம்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:34 IST)
ரூ 25 கோடி பரிசு பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரிசு கிடைத்தத்ஹில் இருந்து எனக்கு நிம்மதியே இல்லை என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் ஓணம் பம்பர் குலுக்கல் ரூபாய் 25 கோடி அனுப் என்ற ஆட்டோ டிரைவர் பெற்றார். இதனையடுத்து அவரது வீட்டில் தினந்தோறும் பலர் தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டு வருவதாகவும் இதனால் தான் நிம்மதி இன்றி இருப்பதாகவும் கூறியுள்ளார் 
 
இன்னும் தனக்கு பரிசுப் பணம் வந்து சேரவில்லை என்று அவர் தெரிவித்த போதிலும் நம்பாமல் பலர் அவரை பணம் கொடுக்காததால் திட்டி விட்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார் 
 
பரிசு விழுந்ததால் தனக்கு நிம்மதியே இல்லை என்றும் சொந்த வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் இந்த பரிசு பணம் இல்லாமல் தனக்கு குறைந்த அளவு பரிசை விழுந்திருக்கலாம் என்றும் அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்