ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு! – 40 ஆண்டுகளிம் முதல்முறையாக நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (09:38 IST)
40 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூயார்க் திரைப்பட விழாவில் வழங்கப்படும் அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. வழக்கமாக ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவிம் முந்தைய ஆண்டில் வெளியான படங்கள் பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பினால் ஹாலிவுட் முதல் அனைத்து உலக திரைப்பட பணிகளும் முடங்கியுள்ளன. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் படப்பிடிப்பு பணிகளும், படம் ரிலீஸ் செய்யும் பணிகளும் முழுவதுமாக முடங்கியுள்ளன. மேலும் சில திரைப்படங்கள் ஒடிடி தளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆஸ்கர் விருது கமிட்டி ஒடிடியில் வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்கலாம் என விதிகளை மாற்றியுள்ளது.

எனினும் பல திரைப்பட பணிகள் நிறைவடையாமல் இருப்பதை கருத்தில் கொண்டு பிப்ரவரி 28, 2021ல் நடைபெற இருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25க்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்