நியுசிலாந்து அணிக்கு குட் நியூஸ்… உலகக்கோப்பையில் வில்லியம்சன் இடம்பெறுவது உறுதி!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (16:05 IST)
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் போது சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்தபோது, காயமடைந்தார். அதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக வில்லியம்சன் விரைவில் வர உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவாகலாம் என்ற அச்சம் இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி கேன் வில்லியம்சன் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவார் என நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நியுசிலாந்து நாட்டவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்