செவ்வாய் தோஷம் தீர அங்காரகனை வழிபடுவது ஏன்...?

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:29 IST)
நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தமுடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிக மிக உயர்ந்தது. வீட்டில் இந்த விரதமிருக்கலாம்.


செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி ஒரு நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம்.

செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய அங்காரகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அங்காரகனுக்கு உகந்த மந்திரம்:

ஓம் வீரத்வஜாய வித்மஹே !
விக்ன ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் !!

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்