ஆடி மாதம் அம்பிகைக்கு மிகவும் உகந்தது ஏன்...?

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (15:00 IST)
தமிழ்  மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். ஆடி மாதம் பிறந்தாலே அனைத்து பண்டிகைகளையும் அழைத்து கொண்டு வரும் என்று கூறுவார்கள். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.


ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையான ஆதி பராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால், குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும்.

ஆடி மாதத்தில் அம்பிகையின் சக்தி கோவிலில் மற்ற மாதத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, வரும் ஆடி வெள்ளிக்கிழமையில், மறக்காமல் அருகில் உள்ள அம்பிகையின் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். ஆடி மாதம் அம்பிகைக்கு மிகவும் உகந்த மாதம் என்பார்கள்.

ஆடி வெள்ளி இன்னும் சக்தி மிக்க நாளாக, சங்கடங்கள் அனைத்தும் போக்குன்கிற தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி மாத வெள்ளிக் கிழமைக்கு முதல் நாள், அதிகாலை வீட்டைச் தூய்மையாக வைத்துக் கொள்ளவும்.

பூஜை மாடத்தை சுத்தப்படுத்தி, விளக்குகளை எடுத்து நன்றாக அலம்பி, துடைத்து வைத்து அதிகாலை 4.30 முதல் 6:00 மணிக்குள் குளித்துவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி வணங்கலாம்.

தேவி பாகவதம் படியுங்கள் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் மற்றும் மஹாலக்ஷ்மியின் கனகதாரா ஸ்தோத்திரம் மஹாலஷ்மி அஷ்டோத்திரம் மஹா லஷ்மி சஹஸ்ரநாமம் மற்றும் அம்பிகையின் அஷ்டோத்திரம் பாராயணம் செய்தால் பலன்கள் இரட்டிப்பாகும். முடிந்தால், காலையிலும் மாலையிலும் வீட்டு வாசலில் நெய் விளக்கேற்றி வைப்பது துளசி பூஜை செய்து தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்தால் இன்னும் மிக நல்ல பலன்களையெல்லாம் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்