நவராத்திரி வழிபாட்டின்போது அம்பாளை எந்த பெயர்களைசொல்லி வழிபாடு செய்யவேண்டும்...?

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:45 IST)
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.


அம்பாளை வணங்குவதன் பலன்: அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

ஜெய்காளி - எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்.

ஜெய்சண்டிகாதேவி - செல்வம் சேரும்.

ஜெய்சாம்பவி - அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

ஜெய்துர்க்கா - ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும். மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

ஜெய்சுபத்ரா - விருப்பங்கள் நிறைவேறும்.

ஜெய்ரோகிணி - நோய் தீரும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்