நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் அவதரித்தது புரட்டாசி மாதத்தில் தான். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகவான் பலமாக இருந்தால் தான் தொழில் வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இருக்கும்.
புதன் பகவானுக்கு உரிய அதி தேவதையாக கருதப்படுவது மகாவிஷ்ணு. அதனால் புதன் பகவான் அவதரித்த புரட்டாசி மாதத்தில் அவருக்கு உரிய தெய்வமான மகாவிஷ்ணு பகவானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் பெருமாளின் அருளும், அதன் வழியாக புதன் பகவானின் அருளும் பரிபூர்ணமாக கிட்டும் என்பது நம்பிக்கை.
சிவனுக்கு இணையாக ஈஸ்வர பட்டம் பெற்ற சனிபகவான், பெருமாளிடம் வரம் பெற்ற மாதம் என்பதாலும் புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.