இன்று விநாயகர் சதூர்த்தி: மும்பை சித்திவிநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (07:41 IST)
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் என விநாய்கருக்கு பல பெயர்கள் உண்டு.



 
 
‘விநாயகர்’ என்றால் ‘மேலான தலைவர்’ என்று அர்த்தம். வி - மேலான: நாயகர் - தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும், ‘ஐங்கரன்’ என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்’ அர்த்தப்படும். 
 
‘கணபதி’ என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன. உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. 
 
இத்தகையை பெருமை வாய்ந்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர். எல்லா வளமும் தறும் விநாயகரை இன்று அனைவரும் வணங்குவோம்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்