இன்று வைகாசி கடைசி சோமவாரம்: விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (18:01 IST)
வைகாசி மாதம் என்றாலே புனிதமான மாதம் என்று கூறப்படும் நிலையில் இன்று வைகாசி கடைசி சோமவாரம் என்பதால் இன்றைய தினம் விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் என்பது முருகப்பெருமானுக்கு உரிய நாளாகும். இன்றைய தினத்தில் விரதம் இருந்தால் வாழ்வில் உள்ள அனைத்து கவலைகளும் விலகிவிடும். 
 
சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். வைகாசி மாதத்தின் கடைசி திங்கட்கிழமையான இன்று சிவபெருமானை வணங்கி பூஜிப்பது தீய சக்திகளை அழிக்கக்கூடிய வல்லமை தரும்.
 
இன்று வைகாசி மாதத்தின் கடைசி சோமவாரம் என்பதால் இன்றைய தினம் வீட்டில் விரதமிருந்து விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்று சிவபெருமானுக்கு தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நிறைவேத்தியம் செய்து வணங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்