தமிழகத்தைக் கலக்கிய உண்மை திருடனின் கதையா கார்த்தியின் ‘ஜப்பான்’?

செவ்வாய், 6 ஜூன் 2023 (07:28 IST)
கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து  மூன்று ஹிட்களைக் கொடுத்த பிறகு கார்த்திக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகி சுமாரான வெற்றியைக் கொடுத்தது. அடுத்து இப்போது அவர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் மற்றும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார்.

கார்த்தியின் அடுத்த ரிலீஸாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இது கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது.இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன. இன்னும் 25 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதமுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிரபலமாக இருந்த கொள்ளையனான திருவாரூர் முருகன் நடத்திய பல கொள்ளை சம்பவங்களை அடியொற்றிதான் ஜப்பான் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஜப்பான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார்.. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு ஜப்பான் ரிலீஸ் ஆகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்