பம்பையில் பங்குனி உத்திரவிழாவின் இறுதி நாளான இன்று ஆராட்டு விழா

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (22:15 IST)
கேரள மாநிலம் பம்பையில்,  சபரிமலை ஐயப்பன் கோவியில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா  கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தினமும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொண்டு, ஐயப்பன் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று விழாவின் 9 ஆம் நாளை முன்னிட்டு, கணபதி ஹோமம் நெய் அபிஷேகம், உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. இவை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடந்தன.இதையடுத்து, உற்சவ பலி தொடங்கியது.

அதன்பின்னர், இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது ஐயப்பனை  அமரவைத்து, மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது.

9:30 மணிக்கு சரம் குத்தி வந்ததும் பள்ளி வேட்டை முடிந்து, அதன் பின்னர் யானையின் ஊர்வலமாக ஐயப்பன் இரவு 12 மணிக்கு சன்னிதானம் ருகை புரிந்தார்.

பங்குனி உத்திரவிழாவின் இறுதி நாளான இன்று ஆராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்