1000 ஆண்டு பழமையான உடைந்த ராமர் சிலை கைவிரல் பொருத்தம்.. சக்தி கொண்டு வர சிறப்பு பூஜைகள்..!

Mahendran

சனி, 23 நவம்பர் 2024 (17:18 IST)
திருப்பதி கோவிலில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான ராமர் சிலையின் கைவிரல் சில ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்தது. தற்போது அந்த கைவிரல் மீண்டும் பொருத்தப்பட்டு, அந்த சிலைக்கு சக்தி ஏற்ற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கோவிலில் சேதமடைந்த சிலைகளை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது மட்டுமே சீரமைக்க வேண்டும் என்ற நடைமுறையில், உடைந்த ராமர் சிலையின் கைவிரல் சீரமைப்பது குறித்து தேவஸ்தான குழுவினர் ஆலோசனை செய்தனர்.
 
அப்போது, கும்பாபிஷேகத்திற்கு முன்பே சில சடங்குகள் செய்து, உடைந்த கைவிரலை சீர் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தனர். இதற்காக சிற்பக் கலைஞர்கள் அழைக்கப்பட்டு, ராமர் சிலையின் கைவிரல் மீண்டும் உருவாக்கப்பட்டது.
 
இந்த சீரமைப்பின் பின்பு, சிலைக்கு சக்திகளை கொண்டு வருவதற்காக சிறப்பு திருமஞ்சன பூஜைகள் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்டு, ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்