கோகுலாஷ்டமி பூஜை: பக்தர்கள் பரவசம்

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (06:28 IST)
கோகுலாஷ்டமி பூஜை: பக்தர்கள் பரவசம்
பகவான் கிருஷ்ணன் பிறந்த நாளான இன்று இந்தியா முழுவதும் கிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன
 
கிருஷ்ண மந்திரங்கள் சொல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாமும் கிருஷ்ண ஜெயந்தியை இன்று கொண்டாடுவோம் 
 
கிருஷ்ணர் ஆலயங்களில் இன்று கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலச நீரால் கிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படும். பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றை பாடல்களை பாடுவார்கள். ஆண்கள் கிருஷ்ணனின் பெருமைகளை பாடல்களாகப் பாடி மகிழ்வார்கள் 
 
இசைக்கருவிகளை முழங்கி எங்கும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற கோஷங்கள் ஒலித்து வருகின்றன. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கிருஷ்ணலீலை நாடகங்கள் மற்றும் மோகினி ஆட்டம் இன்று நடைபெற்று வருகின்றன. ஒரு சில ஆலயங்களில் உரியடி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப் பாடி செல்வார்கள். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு பெற்றோர்கள் மகிழ்வார்கள். மங்கள வாத்தியங்கள் முழங்க கிருஷ்ணஜெயந்தி இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்