கார்த்திகை விரதம்: பக்தர்கள் பரவசம்

ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (06:51 IST)
கார்த்திகை விரதம்: பக்தர்கள் பரவசம்
முருகனுக்கு உகந்த நாளான கார்த்திகை அன்று விரதம் இருப்பது மிகப்பெரிய பலன்களை தரும் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே 
 
இறைவனை வழிபட்டு அவரின் முழு அருளை பெறுவதற்கு மற்ற எல்லா வழிபாட்டு முறைகளை விட விரைவில் பலன் தரக்கூடிய விரத வழிபாட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் 
 
குறிப்பாக முருகப்பெருமானை வழிபடுவது கந்தசஷ்டி விரதத்தை போன்றே மிகச் சிறந்த பலன் அளிக்கக்கூடிய விரதங்களில் ஒன்று கார்த்திகை விரதம். இந்த கார்த்திகை விரதம் மேற்கொள்ளும் முறையை பார்ப்போம் 
 
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த கார்த்திகேயன் என்ற பெயர் பெற்ற முருகன் அருள் பெறுவதற்கு இந்த விரதம் இருப்பது அவசியம். கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கி வாழ்நாள் முழுவதும் முருகன் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று விரதம் இருக்க வேண்டும் 
 
கார்த்திகை நட்சத்திரத்திற்கு முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு உண்டு அன்று இரவு உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்கத் தொடங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து நீராடி முருகனை வழிபட்டு அன்றைய நாள் முழுவதும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் முருகனின் மந்திரங்கள் முருகனின் வெண்பாக்கள் ஆகியவற்றை படிப்பதும் பாராயணம் செய்வதும் ஆக இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முருகனின் அருளைப் பெறலாம்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்