திருவண்ணாமலை பிரம்ம தீர்த்த கரையில் இருக்கும் கால பைரவர்: வழிபட்டால் நினைத்தது நடக்கும்..!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (19:03 IST)
திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கும் நிலையில் இந்த காலபைரவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்று ஐதீகமாக உள்ளது.

ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலையில் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி கபால மாலைடன் காலபைரவர் காட்சி அளிக்கிறார்.  பிரம்மா இங்கு தான் சிவனை வழிபட்டதாக கூறப்படும் அடிப்படையில் இங்கு இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் இங்கு வந்து வணங்கிக் கொள்ளலாம் என்றும் அதேபோல் நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்றால் இந்த கால பைரவரை வணங்கினால் போதும் என்றும் கூறப்படுவது உண்டு.

திருவண்ணாமலை கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக இந்த கால பைரவரை வணங்க வேண்டும் என்றும் அதனால் பெரும் பயன் பெறலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்