பல ஜென்மமாக தொடரும் நாக தோஷம் விலக வேண்டுமா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

Mahendran

சனி, 19 ஏப்ரல் 2025 (18:39 IST)
சோழவள நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகச் செம்பங்குடி நாகநாத சுவாமி திருக்கோவில் விளங்குகிறது. இங்கு இறைவன் நாகநாதர், அம்பாள் கற்பூரவல்லி தயார். ஆதிகேதுவுக்கு தனி சன்னிதி உள்ளது. நாகதோஷ நிவாரணத்திற்கு சிறந்த தலமாகும்.
 
பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் உண்ட அசுரனான ஸ்வபானுவின் தலை சீர்காழியில், உடல் செம்பங்குடியில் விழுந்தது. அவை பாம்புகளாக மாறி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தவமிருந்தன. சிவபெருமான் ராகு, கேதுவாக கிரகபதவியளித்து அருள்பாலித்தார். கேதுவின் பாம்புத் தலை உடல் இங்கு குடியிருப்பதால் ‘செம்பாம்பினன்குடி’ என்ற பெயர் வந்தது. அதுவே ‘செம்பங்குடி’யாக மாற்றம் பெற்றது.
 
ஆலயம் வயல்வெளிகளை சூழ, அமைதியான இடத்தில் உள்ளது. முக்கோண வடிவமைப்புடன், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறையில் நாகநாதர் சிறிய திருமேனியுடன் காட்சி தருகிறார். "கேதீஸ்வரர்" என்றும் அழைக்கப்படுகிறார். வாம பாகத்தில் கற்பூரவல்லி அம்பாள் கிழக்கு நோக்கி எழுந்தருள்கிறார். ஆதி கேதுவுக்கான தனி சன்னிதியும் உள்ளது.
 
ஒன்றுகால பூஜை நடைபெறுகிறது. பசும்பாலால் அபிஷேகம், சிவந்த அல்லி மலரால் அர்ச்சனை, புளியோதரை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. நாகதோஷ நிவாரணம், அறிவு வளர்ச்சி, சுகபோகங்களுக்காக இங்கு வழிபடலாம்.
 
இடம்: சீர்காழி அருகே, திருமுல்லைவாயில் செல்லும் வழியில் 3 கிமீ தொலைவில் செம்பங்குடி அமைந்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்