திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா.. தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (19:44 IST)
திருப்பரங்குன்றம் தெப்ப திருவிழா குறித்த தேதியை கோவில் நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது. 
 
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் தை மாதம் தெப்ப திருவிழா நடைபெறும். இந்த நிலையில் ஜனவரி 30-ம் தேதி தெப்பம் முட்டுதல் நடைபெறும் என்றும் 31ஆம் தேதி தெப்ப திருவிழா நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
ஜனவரி 30 ஆம் தேதி தை கார்த்திகை திருநாளில் தெப்பம் முட்டு தள்ளுதல் நடைபெறும் என்றும் அதன்பின் சுவாமி தேரில் எழுந்தருளை வீதி உலா வருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருவதாகவும் திருவிழாவின் போது பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்