இந்த கோவிலுக்கு போனால் நோயே வராது.. நீண்ட ஆயுள் கிடைக்கும்..!

Mahendran

சனி, 18 அக்டோபர் 2025 (19:00 IST)
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றான திருமீயச்சூர் மேகநாதசுவாமி திருக்கோவில், நீண்ட ஆயுள் மற்றும் நோய்களைத்தீர்க்கும் பரிகார தலமாக பிரசித்தி பெற்றது. இங்கு இறைவன் மேகநாதசுவாமி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
 
லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய இத்தலத்தில், உலகிலேயே அரிதான கோலத்தில் வலது காலை மடித்து ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
 
தீராத நோய்கள் நீங்க, எமன் வழிபட்ட இக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் செய்வது சிறப்பு. மேலும், நீண்ட ஆயுள் வேண்டி இங்கு ஆயுஷ்ய ஹோமம் செய்யப்படுகிறது. பிரண்டை சாதத்தை பிரசாதமாக உண்பதால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
 
கோவில் விமானம் யானையின் பின்புறம் போன்ற கஜப்ரஷ்ட அமைப்பில் உள்ளது. பார்வதியின் கோபத்தை தணிக்கும் விதமாக இறைவன் வேண்டுவது போன்ற அரிய சாந்தநாயகி சிற்பம் இங்குள்ளது.
 
சித்திரை மாதம் 21 முதல் 27-ஆம் தேதி வரை, உதயத்தின்போது சூரியக் கதிர்கள் நேரடியாக மூலவர் லிங்கத்தின் மீது விழுந்து வழிபடுகின்றன. இந்த கோவிலின் உள்ளேயே, அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற திருமீயச்சூர் இளங்கோவிலும் அமைந்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்