தீபாவளி நாளில் அதிகாலை எண்ணெய் தேய்த்து குளிப்பது 'கங்கா ஸ்நானம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், எண்ணெயில் லட்சுமியும், நீரில் கங்கையும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. மேலும், இது நரக சதுர்த்தசி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் மாலை வேளையில் அமாவாசை திதி வருகிறது. எனவே, அன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியையும், செல்வத்தின் அதிபதியான குபேரனையும் பூஜிப்பது சிறப்பானது. குடும்பத்துடன் புத்தாடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து வழிபடுவதால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.