திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்திற்கு அருகிலுள்ள சிவாநந்தீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவருக்கு, பக்தர்கள் மிளகாய்ப் பொடியால் அபிஷேகம் செய்யும் வினோத வழிபாடு நடைபெறுகிறது.
சாதாரண அபிஷேக பொருட்களைத் தவிர்த்து, மிளகாய் பொடியால் அபிஷேகம் செய்வதால், பக்தர்களை பீடித்திருக்கும் எதிர்மறை எண்ணங்களும் ஆற்றல்களும் நீங்கும் என்பது வலுவான நம்பிக்கை.
பணம், நகை போன்றவற்றை இழந்தவர்கள், திருட்டு மற்றும் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், திருமண தடை உள்ளவர்கள் இந்த சக்திவாய்ந்த அபிஷேகத்தை செய்யலாம். திருட்டால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டினால், திருடியவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்றும் நீதி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.