நாளை சந்திராஷ்டம்: அமைதியுடன் இருக்க எளிய ஆன்மீக வழிமுறைகள்!

Mahendran

திங்கள், 13 அக்டோபர் 2025 (18:15 IST)
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிப்பதே சந்திராஷ்டம காலம் ஆகும். பொதுவாக, இது தோஷமான நாளாக கருதப்படுவதால், பலர் பயணம், முக்கிய காரியங்களைத் தவிர்த்து, தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்க அமைதியாக இருப்பார்கள்.
 
ஆனால், பயம் இல்லாமல் இந்தக் காலத்தை கடக்க சில எளிய ஆன்மீக வழிமுறைகள் உள்ளன:
 
சந்திர மந்திரம்: காலையில் "ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ" மந்திரத்தை உச்சரித்து அன்றைய தினத்தைத் தொடங்கலாம்.
 
தெய்வ வழிபாடு: குலதெய்வம், முன்னோர்கள் மற்றும் இஷ்ட தெய்வங்களை மனதார வழிபடுவது அல்லது அருகிலுள்ள அம்மன், விநாயகர் கோவிலுக்குச் சென்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் விநாயகருக்குப் பால் அபிஷேகம் செய்யலாம்.
 
பேச்சு, செயல் கட்டுப்பாடு: தேவையில்லாமல் புறம் பேசுவது, வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 
நிதானமான முடிவுகள்: எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுக்காமல், நிதானமாக யோசித்துச் செயல்பட வேண்டும். திடீர் முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
 
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறை சிந்தனையுடனும் இறைவுணர்வுடனும் அன்றைய நாளைக் கடந்தால், சந்திராஷ்டம காலத்திலும் மன அமைதியையும் நிறைவையும் பெறலாம்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்