வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (18:59 IST)
தமிழ்க்கடவுள் முருகனுக்கு உகந்த மகா கந்த சஷ்டி விழா, சென்னை வடபழனி முருகன் திருக்கோயிலில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
 
 அக்டோபர் 21 அன்று வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் விழா ஆரம்பமாகிறது. அக்டோபர் 22 முதல் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்குகிறது. இது அக்டோபர் 27 உச்சிக்காலத்துடன் நிறைவடையும். பக்தர்கள் ரூ. 250 செலுத்தி பங்கேற்கலாம்.
 
அக்டோபர் 22 முதல் 27 வரை, மங்களகிரி விமானம், சந்திரபிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
 
விழாவின் பிரதான நிகழ்வான சூரசம்ஹார உற்சவம், அக்டோபர் 27 இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் இந்த நிகழ்வு விமரிசையாக கொண்டாடப்படும்.
 
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, அக்டோபர் 28 இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்றிரவு திருக்கல்யாண விருந்தும், சுவாமி வீதி உலாவும் நடைபெறும்.
 
கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் தலைமையில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவைத் தொடர்ந்து நவம்பர் 1 வரை சுவாமி வீதி உலா நடைபெறும்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்