சபரிமலையில் இருகரத்தனாய்ச் சின்முத்திரை பாலித்து யோக நிலையில் அமருவதற்கு முன்பு, ஐயன் தன் 18 ஆயுதங்களைப் பதினெட்டுப் படிகளோடு ஐக்கியமாகும்படி செய்தாராம். இப்பதினெட்டுப் படிகளேறி ஐயனைத் தரிசிக்கும் அன்பர்களை அவன் தன் பதினெட்டு ஆயுதங்களும் சூழ்ந்து எவ்வித ஆபத்தும் வராமல் காக்கும்.
ஐயனைச் சூழ்ந்திருக்கும் பதினெட்டு மலைகளையும் இப் பதினெட்டுப் படிகள் குறிக்கும். அவையாவன:
பதினெட்டுப் படி ஏறிவரும் பக்தர்கள் கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, அன்னமயகோசம் முதலான கோசங்கள் 5, மற்றும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் 3 ஆகியவற்றைக் கடந்து உள்ளுறையும் ஆத்மனையே ஐயப்பனாகத் தரிசிக்கிறார்கள்.