ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
முதல் நாளாக இன்று காளகஸ்தீஸ்வரர் கண்ணப்பருக்கு பூஜை வழங்கப்படும் என்பதை குறிப்பிடும் வகையில் கண்ணப்பர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை அடுத்து மூலவர் சன்னதி எதிரில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 15ஆம் தேதி காலை 9 மணி அளவில் காளகஸ்தீஸ்வரர் சப்பரத்தில் வலம் வருவார் என்றும் நான்கு மாட வீதிகளில் உலா வருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழா பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறும் என்றும் 26 ஆம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் செய்தவுடன் இந்த மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் விழா முடிவடையும் என்றும் கோவில் நிர்வாகி தெரிவித்துள்ளனர்.