ராகு காலத்தில் மெளன விருதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்..!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:15 IST)
ராகு காலம் என்பது சோதனையான காலம் என்று அந்த நேரத்தில் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பது நல்லது என்றும் நமது முன்னோர்கள் கூறுவார்கள். 
 
அந்த வகையில் ராகு காலத்தில் மௌன விரதத்தை கடைப்பிடிப்பது நல்லது என்றும் செய்த பாவத்திற்கான கணக்குகள் குறையும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
தினமும் ராகு காலம் ஒன்றரை மணி நேரம் வரும் என்றும் இந்த ஒன்றரை மணி நேரத்தில் யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த நிலையில் ராகு கால நேரத்தில்   மௌனம் விரதம் இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது.  குறிப்பாக பெண்கள் ராகு கால நேரத்தில் மௌன விரதம் இருந்தால் ஏராளமான பலன் உண்டு என்றும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் மௌன விரதம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்