ஐப்பசி மாதப் பௌர்ணமி மட்டுமல்லாமல், சித்திரை மாதம் முதல் அனைத்து மாதங்களிலும் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், புரட்டாசி பௌர்ணமி அன்று வீட்டில் விரதமிருந்து சிவனை வழிபடுவதும், அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதும் பல விசேஷ பலன்களைத் தரும்.
புரட்டாசி பௌர்ணமி அன்று காலையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறவிகளில் செய்த பாவங்கள் மட்டுமின்றி, இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும்.
மாலை வேளையில் வரும் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால், ஏழு பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், நாம் விரும்பிய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.